பிரான்ஸில் ஒரு மில்லியன் யூரோக்கள் வெற்றி பெற்ற நபர் மாயம்
 
																																		பிரான்ஸில் Euromillions லொத்தர் சீட்டிலுப்பில் ஒரு மில்லியன் யூரோக்கள் வெற்றி பெற்ற ஒருவர் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Hauts-de-Seine மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இந்த தொகையை வெற்றி பெற்றுள்ளார்.
அவர் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வெற்றி பெறப்பட்ட இத்தொகையை வெற்றியாளர் இதுவரை கோரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 28. இரவு 11.59 மணிக்குள் அவர் தனது வெற்றி பெற்ற பணத்தொகை பெற்றுக்கொள்ளாவிட்டால், வெற்றித்தொகை இரத்துச் செய்யப்ப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற தொகைக்குரிய இலக்கம் “KE 116 4078” இதுவாகும்.
ஆண்டு தோன்றும் இரண்டு அல்லது மூன்று பேர் வரை தங்களது வெற்றிப்பணத்தை பெற மறுக்கிறார்கள் என யூரோமில்லியன் உரிமை நிறுவனமான FDJ அறிவித்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
