தமிழ்நாடு

தமிழகம் – தாய் குறித்து இழிவான பேச்சு… சக மாணவனை குத்தி கொன்ற சிறுவன்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கத்தப்பட்டி சுங்கச்சாவடி அருகே தனியார் பவுண்டேசன் சார்பில் உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில், பீகாரை சேர்ந்த 13 மாணவர்கள் தங்கி உருது பயின்று வரும் நிலையில், அதே பள்ளியை சேர்ந்த முகமது சம்சத் (13) என்ற மாணவனுக்கும், ஷாநவாஸ் (09) என்ற மாணவனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவன் ஷாநவாஸை நீண்ட நேரமாக காணாததையடுத்து இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் மேலூர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில் ஷாநவாஸை, முகமது சம்சத் காய்கறி வெட்டும் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, மாணவன் உடலை அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் போட்டு மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. கொலை செய்து விட்டு பின்னர், எதுவும் நடக்காதது போல பள்ளியில் சக மாணவர்களுடன் பேசி இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, ஷாநவாஸ் உடலை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக முகமது சம்சத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மாணவன் ஷாநவாஸ், முகமது சம்சத்தின் தாயை தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த முகமது சம்சத், ஷாநவாஸை கத்தியால் குத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

(Visited 30 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!