ஐரோப்பா செய்தி

24 ஆண்டுகளின் பின்னர் புட்டின் எடுத்த வரலாற்று தீர்மானம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 24 ஆண்டுகளின் பின்னர் வடகொரியா செல்லத் திட்டமிடுவதாகத் தெரியவந்துள்ளது.

புட்டினின் பயணத்துக்கா⅘ன முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டதாக கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கொ தெரிவித்துள்ளார்.

சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வழிகளை ரஷ்யாவும் வடகொரியாவும் ஆராய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திட்டம் உறுதியானால், 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு புட்டினின் முதல் பியோங்யாங் பயணமாக அது அமையும் என குறிப்பிடப்படுகின்றது.

வடகொரியா ரஷ்யாவுக்கு ஆயுதங்களை விநியோகிப்பதாக அமெரிக்காவும் தென்கொரியாவும் நீண்ட காலமாகவே குற்றஞ்சாட்டுகின்றன.

உணவு, மூலப் பொருள்கள், ஆயுத உற்பத்திக்குத் தேவையான பொருள்கள் ஆகியவற்றுக்குப் பரிமாற்றமாகப் பியோங்யாங் மாஸ்கோவுக்கு ஆயுதங்களைக் கொடுப்பதாக சோலும் வாஷிங்டனும் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி