அமெரிக்காவுடன் புதிய நெருக்கடி – கடும் கோபத்தில் சீனா

சீன இலத்திரனியல் வாகன இறக்குமதிக்கான வரிகளை 25 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தும் அமெரிக்க பைடன் நிர்வாகத்தின் திட்டங்களுக்கு சீனா பதிலளித்துள்ளது.
அதன்படி, அமெரிக்காவின் புதிய வரி விதிப்புகளுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
வர்த்தக தடைகள் இரு நாடுகளுக்கு இடையேயான விரிவான உறவை பாதிக்கும் என சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தங்கள் நாட்டின் நலன்களை பாதுகாக்க உறுதியுடன் செயல்படுவோம் என சீன அரசு தெரிவித்துள்ளது.
சீனா மீதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முந்தைய நிலைப்பாட்டை இந்த நடவடிக்கை முரண்படுவதாகவும் சீனாவின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(Visited 28 times, 1 visits today)