இந்தியா – கைது செய்யப்பட்டபோது எந்த நடைமுறையும் பின்பற்றவில்லை – சவுக்கு சங்கர் வழக்கறிஞர் பேட்டி
நீதிமன்றத்தில் அஜர்படுத்திய பின்னர் சவுக்கு சங்கரை காவல்துறையினர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சவுக்கு சங்கரின் வழக்கறிஞர், முல்லை சுரேஷ் கோவையிலிருந்து எனது கட்சிக்காரர் சவுக்கு சங்கர் அழைத்து வந்த போது சோர்வாக காணப்பட்டார்.
அவரிடம் கேட்டபோது புங்கலூர் என்ற இடத்தில் உணவுக்கு நிறுத்தப்பட்ட பொழுது ஏற்கனவே கட்டு போட்டு இருந்த கையை மீண்டும் 3பேர் புடித்து முறுக்கி தாக்கி உள்ளனர். மேலும் அதனை இன்னொரு பெண் காவலர் வீடியோ எடுத்து இவரது முன்பாகவே பலருக்கு அதை ஷேர் செய்துள்ளனர்.
எங்களுக்கு ஏற்பட்ட வலியை விட உனக்கு ஏற்பட்ட வலி குறைவுதான் என தெரிவித்துள்ளனர்.
வாக்கு மூலமாக கூறினார் அதனை நீதிபதிகளை பதிவு செய்த செய்து கொண்டார்.
தற்போது திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அங்கு சிகிச்சைக்குப் பின்னர் விவரம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்ய தேவையில்லை என எங்கள் தரப்பில் பதிவு செய்துள்ளோம்.
அதனை பரிசீர்ப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இவரை 8ம் திகதி ஏற்கனவே கைது செய்தனர் இன்று தான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி உள்ளனர்.
கைது நேரத்தில் என்னென்ன நடவடிக்கை பின்பற்ற வேண்டுமோ அதனை கடைபிடிக்கவில்லை அதனை பட்டியலிட்டு தெரிவித்துள்ளோம்” என்ன தெரிவித்தார்.