IPL Match 64 – லக்னோ அணிக்கு 209 ஓட்டங்கள் இலக்கு
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
டெல்லி அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் மெக்கர்க் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி 27 பந்துகளில் 38 ரன்களை குவித்தார். அபிஷேக் போரெல் 33 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் 23 பந்துகளில் 33 ரன்களை எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டப்ஸ் மற்றும் அக்சர் பட்டேல் முறையே 57 மற்றும் 14 ரன்களை சேர்த்தனர். போட்டி முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது.
லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.