பிரித்தானியாவில் தீவிர புற்றுநோயால் மூக்கை இழந்த நபர் : அறுவைசிகிச்சையில் ஏற்பட்ட மாற்றம்!
பிரித்தானியாவில் புற்றுநோயால் மூக்கை இழந்த ஒரு நபர் அசாதாரண அறுவை சிகிச்சையொன்றை மேற்கொண்டுள்ளார்.
74 வயதான பீட்டர் டிக்சன், 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தனது மூக்கின் ஓரத்தில் ஒரு பரு இருப்பதை முதலில் கவனித்தார், ஆனால் அதைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை.
சில மாதங்கள் கடந்தும், ‘செதில் சொறி’ இருந்த பிறகு அவர் வைத்தியரை அணுக முடிவு செய்துள்ளார். இதன்போது அவருக்கு தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவரது மூக்கைப் பரிசோதித்து, மறுபுறத்தில் இரண்டாவது நோயுற்ற இடத்தைக் கண்டறிந்தனர்.
புற்றுநோய் செல்களை அகற்ற, அறுவைசிகிச்சை நிபுணர்கள் தோலின் இரண்டு பெரிய பகுதிகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள ஆடன்புரூக்ஸ் மருத்துவமனையில் செப்டம்பர் 2023 இல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
இதன்படி நெற்றியில் இருந்து ஒரு தோலை எடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதை பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருந்தமையால் வைத்தியர்கள் யானையின் தும்பிக்கை என்று அழைத்தார்கள்.
அதிர்ஷ்ட வசமாக அவருடைய அனைத்து புற்றுநோய் செல்களும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.