”நீங்கள் எங்கள் குழந்தைகளை எடுத்துக்கொண்டீர்கள்” – இஸ்ரேல் பிரதமர் முன் கோஷம்!
ஹமாஸால் பிடிபட்ட பணயக்கைதிகளின் உறவினர்கள் நீங்கள் எங்கள் குழந்தைகளை எடுத்துக்கொண்டீர்கள் என கோஷமிட்டுள்ளனர்.
ஜெருசலேமில் நடைபெற்ற மௌனப் போராட்டத்தில் பிரதமர் பேசத் தொடங்கியபோது மக்கள் இவ்வாறு கோஷமிட்டு தங்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒக்டோபர் தாக்குதல் குறித்த தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கேலி சித்திரங்களை வைத்திருந்தனர்.
இதேவேளை தற்போதைய போரினால் காசாவின் 36 மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வேலை செய்கிறது. மற்றும் அனைத்து பொருட்களும் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.
கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், சுமார் 250 பணயக்கைதிகள். சுமார் 128 பேர் கணக்கில் வரவில்லை, குறைந்தது 36 பேர் இறந்ததாகக் கருதப்படுகிறது. 35,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.