வேகமடையும் பனிப்பாறைகளின் அழிவு – கடைசி பனிப்பாறையையும் இழந்த வெனிசுலா
வெனிசுலாவும் தனது கடைசி பனிப்பாறையை இழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரத்தில் சியரா நெவாடா மெரிடா மலைத்தொடரில் அமைந்துள்ள ஹம்போல்ட் பனிப்பாறை குறைந்தது இன்னும் ஒரு தசாப்தத்திற்கு பாதுகாக்கப்படும் என்று விஞ்ஞானிகள் முன்னரே கணித்திருந்தனர்.
அந்தப் பகுதியில் இரண்டு ஹெக்டேர் பனிக்கட்டி மட்டுமே மீதம் உள்ளதால், அதற்கு பனிப் படலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதன்படி, 5 பனிப்பாறைகளைக் கொண்ட தென் அமெரிக்காவின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ள வெப்பமண்டல நாடான வெனிசுலா, நவீன காலத்தில் தனது அனைத்து பனிப்பாறைகளையும் இழந்த உலகின் முதல் நாடு.
எல் நினோ காலநிலை நிகழ்வுகளால் வெப்பமண்டல பனிப்பாறைகளின் அழிவு வேகமெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பிருந்த வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் நாட்டில் வெப்பநிலை 4 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பனிப்பாறைகள் உருகும் மெக்சிகோ மற்றும் ஸ்லோவேனியாவும் எதிர்காலத்தில் பனிப்பாறைகளை இழக்கும்.