திருகோணமலையில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து கஞ்சி வழங்கியவர் சற்று முன்னர் கைது

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அப்பகுதி மக்கள் கஞ்சி வழங்கிய ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை திருகோணமலை சம்பூர் சேனையூர்ப் பகுதியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அப்பகுதி மக்கள் கஞ்சி காய்ச்சிக்கொண்டிருந்த போது அதனை சம்பூர் பொலிஸார் தடுக்க முற்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே, இன்றிரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது பெண் ஒருவர் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வலுக்கட்டாயமாக பொலிஸாரினால் இழுந்துச்ச செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், உயிரிழந்த தங்களது உறவுகளைக்கூட நினைவுகூர முடியாதளவிற்கு இலங்கை அரசின் அடக்குமுறைகள் தொடர்வாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)