மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
மெக்சிகோவில் உள்ள சியாபாஸ் கடற்கரைக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அதேநேரம் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.





