அமெரிக்காவில் ரோந்து நடவடிக்கைக்கு சொகுசு காரை பயன்படுத்தும் பொலிஸார்!
அமெரிக்காவின் பொலிஸ் அதிகாரிகள் பிரபலமான ரோல்ஸ் ரோய்ஸ் காரை ரோந்து நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
$250,000 டொலர் மதிப்புள்ள இந்த கார் சொகுசு வியாபாரி பிரமன் மோட்டார்ஸிடம் இருந்து சட்ட அமலாக்க அதிகாரிகள் கொள்வனவு செய்துள்ளனர்.
MBPD ஆட்சேர்ப்புக் குழுவிற்கு இந்த அற்புதமான சேர்ப்பை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என மியாமி காவல்துறை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
ரோந்து காரின் அசாதாரண தேர்வு இணைய பயனர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதாவது கடந்த 2012 ஆம் ஆண்டில் வரி செலுத்துபவர்கள் ரோல்ஸ் ரோய்ஸ் காரை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது எவ்வாறு அனுமதி கிடைக்கப்பெற்றது என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
(Visited 7 times, 1 visits today)