தாய்லாந்தை உலுக்கிய வெப்பம் – 61 பேர் மரணம்
தாய்லாந்தை உலுக்கிய கடுமையான வெப்பம் காரணமாக இந்த ஆண்டு இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு 37 மரணங்கள் ஏற்பட்டன. அந்நாட்டின் சுகாதார அமைச்சு விவரம் தந்தது.
கடந்த சில வாரங்களாகவே தாய்லந்தில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. கிட்டத்தட்ட அன்றாடம் அதிகாரிகள் வானிலையைப் பற்றி எச்சரிக்கை விடுக்கின்றனர்.
தாய்லந்தின் வட கிழக்குப் பகுதியில்தான் ஆக அதிகமான மரணங்கள் பதிவாகின. அங்கு விவசாயம் முக்கியத் தொழிலாகும்.
மனிதர்களால் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தால் நீண்டகாலம் நீடிக்கக்கூடிய கடுமையான வெப்ப அலைகள் அடிக்கடி வரலாம் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்தனர்.
மருத்துவப் பிரச்சினைகளைக் கொண்டிருப்போர் வெளியே இருப்பதைத் தவிர்க்கும்படி மக்களுக்கு தாய்லந்து அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
(Visited 8 times, 1 visits today)