இலங்கையில் பதின்மூன்று ஆண்டுகளில் 111 முறை அமைச்சர்
2010 மற்றும் 2023 க்கு இடையில் இலங்கையின் அமைச்சரவையின் அமைப்பு 111 தடவைகள் மாறியுள்ளதாக வெரிட்டி ரிசர்ச் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி நிஷாந்த டி மெல் நேற்று (09) இலங்கை பத்திரிகை நிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இலங்கை அமைச்சரவையை வர்த்தமானி மூலம் 111 தடவைகள், அண்ணளவாக மாதத்திற்கு ஒரு முறை மாற்றியமைத்துள்ளதாகவும், மாதம் ஒருமுறை அமைச்சரவையை மாற்றியமைக்கும் போது ஒரு அமைப்பு திறம்பட செயற்பட முடியாது எனவும் கலாநிதி நிஷாந்த டி மெல் அங்கு குறிப்பிட்டிருந்தார்.
உதாரணமாக, குடிவரவுத் திணைக்களம் 2010 மற்றும் 2023க்கு இடையில் பத்து தடவைகள் அமைச்சிலிருந்து அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் 2020இல் குடிவரவுத் திணைக்களம் மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள அமைச்சர்கள் சபையில் கட்டமைப்புச் சிக்கல் இருப்பதாகவும், அதில் ஒரு பகுதி அமைச்சுக்களுக்குப் பொருத்தமான விடயதானங்களை பிரிக்காமை என்றும் குறிப்பிட்டார்.
மற்றைய பகுதி அமைச்சுகளுக்குப் பொருந்தாத வேலைப் பாகங்களைச் சேர்ப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள் குழுவின் அமைப்பில் பகுத்தறிவு இருக்க வேண்டும் என்றும், அதை உருவாக்க, வெரிட்டி ரிசர்ச் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின் மூலம் 15 அமைச்சர்கள் சபை மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அந்த மாதிரியை திர்காலத்தில் அனைத்து அரசியல் கட்சிக்கு வழங்க உள்ளதாகவு ம் கூறியுள்ளார்.