தனித்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டால் இஸ்ரேல் தனித்து நிற்கும் – நெதன்யாகு உறுதி!

காசா போரை நிறுத்துவதற்கான சர்வதேச அழுத்தத்தை மீறி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் “தனியாக நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்” அதற்கு எதிராக தனது நாடு “தனியாக நிற்கும்” என்று கூறியுள்ளார்.
ஜெருசலேமில் ஹோலோகாஸ்ட் நினைவு நாளில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இஸ்ரேல் தனித்து நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இஸ்ரேல் தனித்து நிற்கும்.
ஆனால் நாங்கள் தனியாக இல்லை என்பது எங்களுக்குத் தெரியும், ஏனென்றால் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற கண்ணியமான மக்கள் எங்கள் நியாயமான காரணத்தை ஆதரிக்கிறார்கள்.
எங்கள் இனப்படுகொலை எதிரிகளை நாங்கள் தோற்கடிப்போம் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)