தென்னாப்பிரிக்காவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து : தீவிரப்படுத்தப்பட்டுள்ள மீட்பு பணிகள்!
தென்னாப்பிரிக்காவின் கடற்கரை பகுதியில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளுக்குள் முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பகுதியில் மீட்பு பணியாளர்கள் முழுவீச்சுடன் செயற்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 29 பேரில் 16 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சியவர்களை மீட்பதற்காக மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டடம் இடிந்து விழும்போது அந்த தளத்தில் ஏறக்குறைய 75 இற்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது.
(Visited 23 times, 1 visits today)





