அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அஹுங்கல்ல பிரதேசத்தில் இன்று (08) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அஹுங்கல்ல, போகஹபிட்டிய பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





