பிரான்ஸில் பொது போக்குவரத்திற்கான கட்டணங்கள் அதிகரிப்பு!
பிரான்ஸ் தலைநகரில் பொது போக்குவரத்திற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 20 முதல் மெட்ரோ டிக்கெட் விலை 85%க்கும் அதிகமாக உயரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ஒரு டிக்கெட்டின் விலை €2.15 (£1.85) இலிருந்து €4 (£3.43) ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நகரப் பேருந்து டிக்கெட்டின் விலை €2.50 (£2.15) இலிருந்து €5 (£4.29) ஆக இரட்டிப்பாகும்.
இது ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு நடைமுறைக்கு வரும் என்றும் செப்டம்பர் 8 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் போக்குவரத்து பாஸ்களின் விலை அப்படியே இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டண அதிகரிப்பானது பிரான்ஸ் செல்லும் சுற்றுலா பயணிகளை பாதிக்கும் என்பதுடன், ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலம் என்பதால் பார்வையாளர்கள் குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.