நேட்டோ குண்டுவெடிப்பின் ஆண்டு நினைவு: ஜி ஜின்பிங் செர்பியாவிற்கு விஜயம்
சீன தூதரகத்தின் மீது நேட்டோ குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 3 சீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதன் 25வது ஆண்டு நினைவு தினத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் செவ்வாய்கிழமை மாலை செர்பியாவிற்கு MIG-29 ஜெட் விமானத்தில் பலத்த பாதுகாப்புடன் பயணம் செய்துள்ளார்.
பால்கனில் சீனாவின் மிக முக்கியமான பங்காளியாகக் கருதப்படும் செர்பியாவில், நாட்டில் சீனாவின் பல பில்லியன் முதலீடுகள் மற்றும் சாத்தியமான புதிய ஒப்பந்தங்கள் குறித்து ஜி ஜின்பிங் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரஷ்யாவிற்கு ஆதரவான கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாகவும் சீன முதலீட்டை அதிகம் பெறுபவர்களாகவும் பார்க்கப்படுகிறது.
“நாங்கள் இன்று வரலாற்றை எழுதுகிறோம்,” என்று செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வூசிக், செர்பிய ஜனாதிபதி மாளிகையின் முன் ஷியை வரவேற்க திரண்டிருந்த பெருந்திரளான மக்களிடம், கைதட்டி “சீனா, சீனா” என்று கோஷமிட்டுக் கூறியுள்ளார்.
இரு நாடுகளும் 29 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன
2020 முதல் சீனா செர்பியாவில் மிகப்பெரிய முதலீட்டாளராக இருந்ததாகவும், அதன் முதலீடு கடந்த தசாப்தத்தில் 30 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் வுசிக் கூறினார். ஜூலையில் செயல்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் சீனாவிற்கு 95% செர்பிய தயாரிப்புகளுக்கு கட்டணமில்லா ஏற்றுமதிக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
செர்பியாவிற்கு பின்னர் அவர் ஹங்கேரிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.