இதுவரை அறியாத Gmail செட்டிங்ஸ்
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் ஜிமெயில் அனுபவத்தை மேம்படுத்த இந்த 5 ஆப்ஷன்களைப் பாருங்க.
ஜிமெயில் default ஆக அனைத்து notifications-களையும் அனுப்பும். இதை நீங்கள் மாற்றியமைக்கலாம். All, High priority, None என்று ஆப்ஷன்கள் இருக்கும். இதில் All என்பது அனைத்து நோட்டிவிக்கேஷன்களையும் பெறுவது. High priority என்பது நீங்கள் கொடுக்கும் priority இ-மெயிலில் இருந்து மெசேஜ் வந்தால் மட்டும் காண்பிக்கும். None என்பது உங்களுக்க எந்த நோட்டிவிக்கேஷன்களையும் காண்பிக்காது.
இங்கு 3 ஆப்ஷன்கள் இருக்கும். primary, promotional emails and social media notifications ஆப்ஷன்கள் இருக்கும். இதில், primary ஆப்ஷன் ஒருவருக்கு ஒருவர் உரையாடல்கள் இடம்பெறும். இதை செலக்ட் செய்து பயன்படுத்தலாம்.
இந்த அம்சத்தை எனெபிள் செய்வதன் மூலம், உங்கள் மொபைலில் ஜிமெயிலில் இருந்து நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெயிலிலும் தானாகவே உங்கள் கையொப்பம் Add செய்யப்படும். இதே போன்று நீங்கள் தொடர்பு விவரங்கள், உங்கள் வேலை பற்றி தகவல்களையும் Add செய்யலாம்.
ஸ்மார்ட் கம்போஸ் மற்றும் ஸ்மார்ட் ரிப்ளையை எனெபிள் செய்வதன் மூலம், புதிய மின்னஞ்சலை உருவாக்கும் போது ஜிமெயில் predictive writing பரிந்துரைகளை வழங்கும். இது குறிப்பிட்ட மின்னஞ்சல்களுக்கான பதில்களையும் பரிந்துரைக்கும். எனெபிள் செய்யப்பட்டதும், இ-மெயில் அனுப்புவது எளிதாகும். மேலும் தேவையின் அடிப்படையில், பரிந்துரைக்கப்பட்ட உரையை மாற்றி அமைக்கலாம்.
நீங்கள் விடுமுறையில் இருக்கும்போது உங்களுக்கு ஆஃபிஸ் மெயில் வருகிறது என்றால் அதை தவிர்க்க வேண்டும் என்றால் இந்த ஆப்ஷனை பயன்படுத்தலாம். அதில் உங்கள் விடுப்பு விவரங்கள் தேதியைக் குறிப்பு மெசேஜ் டைப் செய்து அனுப்பலாம். தேவைப்பட்டால் ‘send to my contacts only’ ஆப்ஷனையும் பயன்படுத்தலாம்.