புட்டினை சிறையில் அடைக்க வேண்டும் : நெதர்லாந்தில் ஒன்றுக்கூடிய ஆர்ப்பாட்டகாரர்கள் வலியுறுத்தல்!
நெதர்லாந்தில் உள்ள ஹேக் அமைதி அரண்மனைக்கு வெளியே அதிபர் விளாடிமிர் புடின் பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டஜன் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜேர்மனியில் இருந்து பயணித்த பலர், ஒரு மாபெரும் கார்னிவல் பவனியை ஏந்திச் சென்றுள்ளனர்.
அதில் ரஷ்ய தலைவரின் கைகளில் இரத்தம் தோய்ந்த ஒரு கேலிச்சித்திரம் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.
போராட்டகாரர்கள் புடினை சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரஷ்ய கைதிகளை ஆதரிக்கும் பெர்லினை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் டினா முசினா, புடினின் குற்றங்கள் குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.





