ஆசியா விளையாட்டு

மலேசிய கால்பந்து வீரர் மீது ஆசிட் வீச்சு – ஒரே வாரத்தில் இரண்டாவது வீரர் மீது தாக்குதல்!

மலேசிய தேசிய கால்பந்து அணியின் வீரராக இருப்பவர், பைசல் ஹலிம். 26 வயதான பைசல், சிலாங்கூர் கால்பந்து கிளப்பில் விங்கராகவும் உள்ளார்.

இந்த நிலையில், வார இறுதிநாளான நேற்று (05) அவர் மீது யாரோ ஆசிட் வீசிச் சென்றுள்ளனர். இதில் அவருடைய கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் மார்பு ஆகியன பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சிலாங்கூர் மாநிலத்தின் விளையாட்டு அதிகாரி நஜ்வான் ஹலிமி உறுதிப்படுத்தி உள்ளார்.

Malaysia national football team player Faisai Halim suffers acid attack -  VnExpress International

இதுகுறித்து அவர், ”இந்த வன்முறையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். விரைவில் இந்த வன்முறையை இழைத்த நபரைக் பொலிஸார் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த வாரம் மற்றொரு தேசிய வீரரான அக்யார் ரஷித், கிழக்கு மாநிலமான தெரெங்கானுவில் அவரது வீட்டிற்கு வெளியே நடந்துசென்றபோது, அவரை வழிமறித்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இதனால் அவருக்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டதாகவும், அவரிடமிருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகின.

அக்யார் ரஷித்

இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் ஹமிடின் முகமது அமீன், ”இரண்டு தாக்குதல் சம்பவங்களும் வருத்தம் அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், மலேசியாவில் தொடர்ந்து தேசிய கால்பந்து வீரர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்