சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து – ஸ்தலத்திலேயே ஒருவர் பலி

சிங்கப்பூர் வீடு ஒன்றில் தீ மூண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாம்போவில் உள்ள ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புளோக் 76 லோரோங் லிமாவில் உள்ள அந்த வீட்டில் மூண்ட தீ குறித்து அதிகாலை 2.30 மணி அளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
6ஆவது தளத்தில் உள்ள வீட்டில் தீப்பற்றியது. வீட்டினுள் இருந்த இருவர் தீயணைப்பாளர்களால் காப்பாற்றப்பட்டனர்.
அவர்கள் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
வீட்டின் படுக்கை அறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் இருந்த வீடுகளிலிருந்து சுமார் 200 பேர் வெளியேற்றப்பட்டனர்.
தீ மூண்டதன் காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
(Visited 33 times, 1 visits today)