ஐரோப்பா செய்தி

ஆபிரிக்காவை உலுக்கிய ஆபத்து பிரான்ஸில் – தயார் நிலையில் சுகாதார பிரிவு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பிராந்தியத்தில் Lassa வைரஸ் தொற்றிய ஆண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவருக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இரத்தக் கசிவுக் காய்ச்சலை ஏற்படுத்துகின்ற இந்த வைரஸ் மனிதர்களில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றக் கூடியது என்பதால் குறிப்பிட்ட நோயாளியுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்த ஏனையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.

மேற்கு ஆபிரிக்காவின் சில நாடுகளில் பரவிக் காணப்படுகின்ற இந்த வைரஸ் காய்ச்சல் வட அரைக் கோள நாடுகளில் குறிப்பாகப் பிரான்ஸில் கண்டறியப்படுவது இதுவே முதல் முறை என்பதால் அதன் மீது தீவிர கவனம் திரும்பி உள்ளது.

லஸ்ஸா வைரஸ் மேற்கு ஆபிரிக்காவில் குறிப்பாக நைஜீரியாவில் நிரந்தரத் தொற்று நோயாக உள்ளது. அந்தப் பிராந்தியத்தில் காணப்படுகின்ற சிறிய வகை எலி இனங்களின் மலசலக் கழிவுகள் மூலம் அது மனிதர்களுக்குத் தொற்றுகின்றது.

நைஜீரியாவின் லஸ்ஸா (Lassa) நகரில் 1969 இல் முதலாவது நோயாளி இனங்காணப்பட்டார். அதனாலேயே இந்த வைரஸுக்கு “லஸ்ஸா” என்ற பெயர் வந்தது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி