சீன ஜனாதிபதி ஐரோப்பாவுக்கு விஜயம்!
5 ஆண்டுகளுக்கு பிறகு சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் ஐரோப்பாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஐரோப்பாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நல்லுறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் சீன ஜனாதிபதி குறித்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது சீன ஜனாதிபதி பிரான்ஸ், சேர்பியா மற்றும் ஹங்கேரிக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பல உளவு ஊழல்கள் மற்றும் உக்ரைனில் நடந்த போரில் ரஷ்யாவிற்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகப் போரைத் தவிர்க்க சீனா முயற்சிக்கும் நிலையில் இந்த விஜயம் வருகிறது.
சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்யின் முதல் விஜயம் பாரிஸ் ஆகும். திங்களன்று, அவர் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரை சந்திக்க உள்ளார்.