இது யாருனு தெரியுதா? யார் வீட்டு திருமணம்னு தெரியுமா? குட்டித்தளபதிய பாருங்கப்பா….
																																		பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமணம் சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய் மனைவி சங்கீதா கலந்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலானது.
விஜய்யை பிரிந்து மும்பையில் சங்கீதா வசித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருந்தது. மேலும் பல வருடங்கள் ஆக வெளியில் சங்கீதா வராமல் இருந்த நிலையில் ஷங்கர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டது பேசு பொருளாக மாறியது.
மேலும் இந்நிகழ்ச்சியில் சங்கீதா மட்டுமல்ல அவரது மகன் ஜேசன் சஞ்சையும் கலந்து கொண்ட புகைப்படம் இப்போது வெளியாகி இருக்கிறது.
தளபதி விஜய்யின் மகனாக இருந்தாலும் தனக்கான அடையாளம் வேண்டும் என்று சினிமாவில் இயக்குனராக களம் இறங்கி உள்ளார் சஞ்சய்.
ஏற்கனவே குறும்படங்களை இயக்கிய சஞ்சய் முதல் படத்திலேயே வெற்றி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஷங்கரின் பிள்ளைகளின் நண்பனாக சஞ்சய் இருந்து உள்ளார். இதனால் ஐஸ்வர்யாவின் ரிசப்ஷன் நிகழ்ச்சியில் செம லுக்கில் வந்து மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

        



                        
                            
