அடையாள அட்டை இன்றி வாக்களிக்க வந்த இங்கிலாந்து முன்னாள் பிரதமர்
முன்னாள் கன்சர்வேடிவ் பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன், ஏற்றுக்கொள்ளக்கூடிய புகைப்பட அடையாள அட்டையை கொண்டு வர மறந்துவிட்டதால், அவரது உள்ளூர் வாக்குச்சாவடியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
மேலும் அவர் தேவையான அடையாளத்துடன் பின்னர் திரும்பி வந்து வாக்களித்துள்ளார்.
அவர் தெற்கு ஆக்ஸ்போர்டுஷையரில் தனது வாக்களித்தார்.
வாக்களிக்க புகைப்பட அடையாள அட்டை தேவைப்படும் புதிய விதிகள் ஜான்சனின் அரசாங்கத்தால் தேர்தல்கள் சட்டம் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மே 2023 இல் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்காளர்கள் அடையாள அட்டையைக் காட்ட வேண்டியதன் மூலம் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது.
புதிய விதிகளின் விளைவாக இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சுமார் 14,000 பேர் வாக்களிக்க முடியாமல் போனதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலில் பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், முதியோர் அல்லது ஊனமுற்றோரின் பஸ் பாஸ்கள் மற்றும் ஒய்ஸ்டர் 60+ கார்டுகள் உட்பட 22 ஏற்றுக்கொள்ளக்கூடிய ஐடி வடிவங்கள் உள்ளன.