ஜெர்மனியில் உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஜெர்மனி நாட்டில் உயர்தர பரீட்சை நடைபெறவுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனி நாட்டில் அபிடு என்று சொல்லப்படுகின்ற கா பொ த உயர்தர பரீட்சை இவ்வாரம் ஆரம்பிக்கவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.
குறிப்பாக நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் இந்த வருடம் 90 ஆயிரம் மாணவர்கள் பரீட்சையில் தோன்றுகின்றார்கள் என்றும் தெரியவந்திருக்கின்றது.
இதேவேளை தொழிற்கல்வி கற்பிக்கின்ற பாடசாலையில் வருகின்ற செவ்வாய்க்கிழமை இந்த பரீட்சை ஆரம்பிக்கவுள்ளது.
இந்நிலையில் வருகின்ற வைகாசி மாதம் ஆரம்பத்தில் இந்த பரீட்சைகள் முடிவடைகின்றது என்றும் தெரியவந்தருக்கின்றது.
கொரோனா காலங்களில் பரீட்சைகளில் தோன்றிய மாணவர்களுக்கு சில சலுகைகைள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது 2019 ஆம் ஆண்டு நிலைப்பாட்டை பரீட்சை திணைக்களம் எடுக்கும் என்றும் தெரியவந்திருக்கின்றது.