புலம்பெயர் சமூகத்தால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள நன்மை!
புலம்பெயர் சமூகத்தால் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு நல்லது நடப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சீனா, இந்தியா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளின் பொருளியல் தடுமாறுவதற்கு அந்நாடுகள் குடியேறிகளை விரும்பாததே காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட இவ்வாண்டுக்கான வளர்ச்சி மதிப்பீட்டை ஒட்டி ஜனாதிபதி ஜோ பைடன் பேசினார்.
ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வளர்ச்சி இவ்வாண்டு குறையும் என்றும் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றும் நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த ஆண்டு இரண்டரை விழுக்காடு வளர்ந்தது. இவ்வாண்டு அந்த வளர்ச்சி கிட்டத்தட்ட இரண்டே முக்கால் சதவீதமாக இருக்கும் என்று நாணய நிதியம் கணிக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப், தொடர்ந்து குடியேறிகளுக்கு எதிராக முன்வைக்கும் கருத்துகளை பைடன் கண்டித்தார்.