ஜப்பானிய பிரதமர் AI தொழில்நுட்பத்தை ஒழுங்குப்படுத்துவதற்கான கட்டமைப்பை வெளியிட்டுள்ளார்!
ஜப்பானிய பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா AI ஐ ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயன்படுத்துவதற்கான சர்வதேச கட்டமைப்பை வெளியிட்டுள்ளார்.
பாரிஸை தளமாகக் கொண்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் ஆற்றிய உரையில் அவர் இந்த கட்டமைப்பை வெளியிட்டுள்ளார்.
“உலகை மேலும் வளப்படுத்த ஜெனரேட்டிவ் AI ஒரு முக்கிய கருவியாக இருக்கும் திறனைக் கொண்டுள்ளது எனக் கூறிய அவர் ஆனால் “தவறான தகவல்களின் ஆபத்து போன்ற AI இன் இருண்ட பக்கத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஏழு முன்னணி தொழில்மயமான நாடுகளின் குழுவிற்கு ஜப்பான் தலைமை தாங்கியபோது, சர்வதேச வழிகாட்டுதல் கொள்கைகள் மற்றும் AI டெவலப்பர்களுக்கான நடத்தை நெறிமுறைகளை உருவாக்க ஹிரோஷிமா AI செயல்முறையைத் தொடங்கியது.
ஹிரோஷிமா AI செயல்முறை நண்பர்கள் குழு என்று அழைக்கப்படும் தன்னார்வ கட்டமைப்பில் சுமார் 49 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் கையெழுத்திட்டுள்ளன என்று கிஷிடா கூறினார்.