சிங்கப்பூரில் 2 பிள்ளைகளுக்கு தந்தை செய்த கொடூரம் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சிங்கப்பூரில் தனது 2 பிள்ளைகளை கொடூரமாக தாக்கிய ஒருபிள்ளையை கொலை செய்த தந்தை தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலில் 5 வயது மகளைக் கொன்ற 44 வயது தந்தைக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று குறித்த தந்தைக்கு 34 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
குழந்தைகளைத் துன்புறுத்தியதற்காக நான்கு குற்றச்சாட்டுகளும் தடயங்களை மறைத்ததற்காக ஒரு குற்றச்சாட்டும் சிறுமியைக் கொலை செய்ததற்காக ஒரு குற்றச்சாட்டும் அந்த நபர் சுமத்தப்பட்டன.
தன்மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கப்படுமுன் அவர் மீதான மற்ற 20 குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டன.
கொலை செய்யப்பட்ட சிறுமி உட்பட பாதிக்கப்பட்ட இருவரும் குற்றவாளியின் முதல் திருமண உறவின் மூலம் பிறந்த பிள்ளைகள். 2015 ஆம் ஆண்டு 33 வயது மதிக்கத்தக்க பெண்ணை இரண்டாவதாகக் குற்றவாளி மணந்தார். அவர்கள் இருவருக்கும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
கொலையான ஐந்து வயது சிறுமியின் பெயர் ஆயிஷா. தற்காப்புக் கலைப் பயிற்சி பெற்ற அவளின் தந்தை, இடைவிடாமல் அவளது தலையில் குத்தியதால் பலத்த காயமடைந்து, வீட்டின் கழிவறையிலேயே அவள் உயிரிழந்தாள்.
இச்சம்பவம் 2017ஆம் ஆண்டு நடந்தது. ஆயிஷாவும் அவளது இளைய சகோதரரும் 2015ஆம் ஆண்டு முதல் அவர்களின் தந்தையால் துன்புறுத்தப்பட்டனர். அவளின் உடலில் பல வடுக்கள், காயங்கள் இருந்தன. மேலும், கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் அவள் பாதிக்கப்பட்டிருந்தாள்.
குழந்தைகளுக்கு உணவளிக்காமல் அக்கொடூரத் தந்தை அவர்களைக் கொடுமைப்படுத்தினார். பசிக் கொடுமையால் அக்குழந்தைகள் மலத்தையும் மெத்தையில் இருந்த திணிப்புகளையும் உட்கொண்டதாகக் கூறப்பட்டது.
மேலும், அவர்கள் 10 மாதங்களாகக் கழிவறையில் ஆடையின்றி அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.