ஆசியா செய்தி

வியட்நாமில் செத்து மடிந்த பல்லாயிரக்கணக்கான மீன்களால் அதிர்ச்சி

வியட்நாமின் தெற்கே டொங் நய் மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் நீர்த்தேக்கத்தில் உயிரிழந்துள்ளன.

அதீத வெப்ப அலையும் ஏரியின் நிர்வாகமும் அதற்குக் காரணங்கள் என்று உள்ளூர்வாசிகளின் கருத்துகளும் உள்ளூர் ஊடகங்களும் தெரிவித்தன.

தென்கிழக்காசியாவில் வெயில் கொளுத்துகிறது. அதன் பிடியில் மாட்டிக்கொண்ட நாடுகளில் வியாட்நாமும் ஒன்றாகும்.

தண்ணீர்ப் பற்றாக்குறையால் நீர்த்தேக்கத்தில் மீன்கள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் ஊடகங்களின் அறிக்கைப்படி நீர்த்தேக்கம் உள்ள பகுதியில் பல வாரங்களாய் மழை பெய்யவில்லை என்று கூறப்பட்டது.

அதனால் நீர்த்தேக்கத்தில் நீர் குறைந்தது. மீன்கள் உயிர்வாழ அந்த நீர் போதாததால் அவை இறந்தன. மேலும் பயிர்களைக் காப்பாற்ற நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் வயல்களுக்கு மாற்றப்பட்டது.

அதனாலும் நீரின் அளவு குறைந்தது. நீர்த்தேக்கத்தின் அளவை அதிகரிக்க நிர்வாகக் குழு சில சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது.

அந்த முயற்சிகள் பலனின்றி மீன்கள் மடிந்தன. கிட்டத்தட்ட 200 டன் மீன்கள் மடிந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!