ஆசியா செய்தி

சிங்கப்பூரில் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள சொக்லெட் கடைகள்!

சிங்கப்பூரில் உள்ள சிறிய சொக்லெட் கடைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சொக்லெட் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் கொக்கோவின் விலையேற்றமே இதற்கு காரணமாகியுள்ளது.

செலவுகளைக் குறைக்கவும் வருவாயைக் கூட்டவும் அவை சொக்லெட் மட்டும் விற்பனை செய்வதிலிருந்து மாறி வேறு தின்பண்டங்களையும் விற்பனை செய்கின்றன.

ஐவரி கோஸ்ட், கானா ஆகிய நாடுகளே கொக்கோவை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளாகும்.

அந்த நாடுகளில் பருவநிலை மாற்றம், நோய்ப்பரவல் போன்ற காரணங்களால் கொக்கோவின் விநியோகம் பாதிக்கப்பட்டது.. விலையும் கூடியது. சிங்கப்பூரில் உள்ள சிறிய கடைகளில் சில சொக்லெட் மட்டும் விற்பனை செய்வதைத் தவிர்த்து வேறு சில உத்திகளைக் கையாளுகின்றன.

பொதுமக்கள் சொக்லெட் செய்து பார்க்கும் வகுப்புகளைச் சில கடைகள் வழங்குகின்றன. இப்போதைக்குச் சொக்லெட் கடைக்காரர்கள் செலவுகளை ஈடுகட்ட முயற்சி செய்தாலும் சிறிது காலத்திற்குச் சொக்லெட்டின் விலை தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கொக்கோ மரங்கள் வளர 3 முதல் 4 ஆண்டுகள் வரை பிடிக்கும். அனைத்துலகக் கொக்கோ அமைப்பு அதனைத் தெரிவித்தது. கொக்கோவின் உற்பத்தி இந்த ஆண்டு 10 சதவீதம் வரை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 28 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!