கஜகஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அதிரடியாக கைது!
கஜகஸ்தானில் 2022 ஆம் ஆண்டில் நாட்டைப் பற்றிக் கொண்ட அமைதியின்மை மீதான கொடிய பொலிஸ் அடக்குமுறை தொடர்பாக, முன்னாள் உள்துறை அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் உள்துறை அமைச்சர் எர்லான் துர்கும்பயேவ் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அந்நாட்டின் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கஜகஸ்தானில் கடந்த 2022 ஆம் ஆண்டு வாகனங்களுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் விலை கடுமையாக அதிகரித்தபோது கலவரம் ஆரம்பமாகியது.
அந்த எதிர்ப்புக்கள், முன்னாள் தலைவர் நர்சுல்தான் நசர்பயேவுக்கு எதிரான ஊழல், பொருளாதார சமத்துவமின்மை பற்றிய விமர்சனங்களாக உருவெடுத்தது.
நாட்டின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில், போராட்டங்கள் வன்முறையாக மாறியபோது ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக் கொல்ல உத்தரவுகளை பிறப்பித்தார். இதில் 238 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.