கொரோனா போன்ற பெரிய நோய்ப்பரவலை சமாளிக்க உலக நாடுகள் போடும் திட்டம்
கொரோனா போன்ற பெரிய நோய்ப்பரவலை சமாளிக்க உலக நாடுகள் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
COVID 19 போன்று மீண்டும் ஒரு பெரிய நோய் வந்தால் உலகம் அதை எப்படிக் கையாள்வது என்பது பற்றிய பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
பேச்சு இரண்டு வருடமாக நடக்கிறது. தொடங்கியிருப்பது ஒன்பதாவது கடைசிச் சுற்றுப் பேச்சுவார்த்தையாகும்..
உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Ghebreyesus) COVID 19 போன்ற ஒரு நோய் இன்று வந்தால் அப்போது ஏற்பட்ட அதே சங்கடம் இப்போதும் ஏற்படும் என்றார்.
அப்படி ஒரு நோய் அடுத்து வருமா என்பது கேள்வியல்ல அது எப்போது வரும் என்பதே கேள்வி என டாக்டர் கேப்ரியேசஸ் குறிப்பிட்டுள்ளார்..
ஜெனிவாவில் 194 நாடுகள் இன்றுமுதல் அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை பேசவிருக்கின்றன. இணங்க வேண்டிய அம்சங்கள் பற்றிய குறிப்பு நூறு பக்கத்துக்கு மேல் இருக்கிறது.
வசதி குறைந்த நாடுகளுக்குத் தேவையான தொழில்நுட்பத்தை உடனே தருவது என்ற அம்சம் பலவீனமாகவே இருப்பதாக Doctors Without Borders உலக மருத்துவ அறநிறுவனம் கூறுகிறது.