உலகளவில் பின்தங்கியுள்ள ஐரோப்பா – பிரான்ஸ் ஜனாதிபதி கவலை
உலக நாடுகளோடு ஒபிடுகையில், ஐரோப்பா மிகவும் பின் தங்கியுள்ளது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
பொதுவான மறுசீரமைப்புக்களைச் செய்வதில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரிசில் உள்ள Sorbonne கல்லூரி வளாக அரங்கில் ஜனாதிபதி உரையாற்றினார்.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் இந்த உரை நீடித்தது. அதில் பொதுவாக தொழிழ்நுட்பங்கள் குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் பல விடயங்களை வெளியிட்டார்.
குறிப்பாக, பிரான்ஸ் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் தொழில்நுட்ப விடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகவும் பின் தங்கி உள்ளதாகவும், ‘மெதுவாக’ இயங்குவதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, பொதுவான விடங்களை ஐரோப்பா சீரமைப்பு செய்வதிலும் தாமதத்தையே கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
(Visited 7 times, 1 visits today)