ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு நடக்கும் கொடுமை : அவசர நிலையை அறிவிக்கக் கோரி ஒன்றுதிரண்ட மக்கள்!
ஆஸ்திரேலியாவில், இந்த ஆண்டு இதுவரை சராசரியாக நான்கு நாட்களுக்கு ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அந்நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுக்கூடி பேரணிகளை நடத்தியுள்ளனர்.
தலைநகர் கான்பராவில் கூடிய எதிர்பாளர்கள் பாலின அடிப்படையிலான வன்முறை தேசிய அவசரநிலையாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறையை தேசிய அவசரநிலையாக வகைப்படுத்த வேண்டும் என்ற எதிர்ப்பாளர்களின் அழைப்புகளுக்கு பதிலளித்த அந்நாட்டின் பிரதமர் அல்பானீஸ், இந்த வகைப்பாடு பொதுவாக வெள்ளம் அல்லது காட்டுத்தீயின் போது தற்காலிகமாக பணம் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என்றார்.
“எங்களுக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் தேவையில்லை – வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம், ஆண்டுக்கு ஆண்டு, நாங்கள் இதை தீவிரமாக தீர்க்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.