இலங்கையர்களுக்கு வெளிநாட்டு ஆசைக்காட்டி ஏமாற்றிய அதிபருக்கு நேர்ந்த கதி
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மொனராகலை தொம்பகஹவெல பிரதேசத்தில் வசிக்கும் கொரிய மொழி தனியார் கல்வி ஆசிரியர் ஒருவரை சிறிபுர பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் பொலன்னறுவை, நுவரகல மற்றும் சிறிபுர பிரதேசங்களைச் சேர்ந்த மக்களிடம் 5000 ரூபா மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் வேறு பிரதேசங்களில் உள்ளவர்களிடம் பணம் மோசடி செய்துள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





