அமெரிக்கா – கைது நடவடிக்கையின் போது தாக்குதல்… இந்திய வம்சாவளி நபர் பொலிஸாரால் சுட்டுகொலை!
அமெரிக்காவின் சான் அன்டோனியோ நகரின் சேவியட் ஹைட்ஸ் பகுதியில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 42 வயதான சச்சின் சாஹூ என்பவர் பொலிஸார் சுட்டுகொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நபர் கடந்த 21ம் திகதி தன்னுடன் தங்கியிருந்த ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து அவரை தாக்கியுள்ளார். மேலும், அவர் மீது தனது காரை ஏற்றியதில் பலத்த பாயம் ஏற்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.இந்த தாக்குதல் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சச்சின் சாஹூவை தேடி வந்தனர்.
இதற்கிடையே தப்பிச் சென்ற சச்சின் சாஹூ, சில மணித்தியாலம் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.இது குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து பொலிஸார் அந்த வீட்டை சுற்றி வளைத்து சச்சின் சாஹூவை கைது செய்ய முயன்றுள்ளார். அப்போது, நடந்த களேபரத்தில் அவரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்