ஆஸ்திரேலியாவில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : 07 பதின்ம வயதினர் கைது!
வன்முறை தீவிரவாத சித்தாந்தத்தைப் பின்பற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட ஏழு பதின்ம வயதினரை ஆஸ்திரேலிய பொலிஸார் இன்று (24.04) கைது செய்துள்ளனர்.
சிட்னி முழுவதும் தாக்குதல்களில் இருந்து சமூகத்தை பாதுகாப்பதற்காக கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
15 முதல் 17 வயதுடைய ஏழு பேர், ஏப்ரல் 15 அன்று சிட்னி தேவாலயத்தில் ஒரு பாதிரியாரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதை அடுத்து சோதனை நடவடிக்கைகளை முடக்கிவிடப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் உடனடி அச்சுறுத்தலாகக் கருதப்பட்டதால் கைது செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீஸ் துணை ஆணையர் கிறிஸ்ஸி பாரெட், புலனாய்வாளர்கள் குறிப்பிட்ட இலக்குகள் அல்லது “வன்முறைச் செயலின்” நேரத்திற்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறினர்.
(Visited 4 times, 1 visits today)