தூங்கி எழும்போது இந்த அறிகுறிகள் இருந்தால் அவதானம்
தொடர்ந்து நடக்கும்போது தொடர் தலைவலி ஏற்பட்டால், ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது.
அடிக்கடி ஏற்படும் மூக்கில் ரத்த கசிவு, குறிப்பாக நடக்கும்போது, ஏற்பட்டால் அது அதிக ரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
நாம் தூங்கி எழும்பும்போது நமக்கு நமது தலை வலித்தாலோ அல்லது மயக்கம் வருவது போல் இருந்தால் ரத்தம் அழுத்தம் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
இதயத்தில் திடீரென காலை நேரத்தில் ஏற்படும் அழுத்தம், நமக்கு ரத்த அழுத்தம் உள்ளது என்பதற்கு அறிகுறியாக இருக்கலாம். இதுபோல பார்வையில் தெளிவற்று இருப்பது, சில புள்ளிகளை காண்பது கூட ரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
இரவு முழு நேரம் தூங்கிய பிறகு நமக்கு ஏற்படும் கடும் சோர்வு, கூட ரத்த அழுத்தம் காரணமாக இருக்கலாம்.
முச்சி திணறுவது அல்லது மூச்சுவிடுவதில் சிறமம் ஏற்படுவது கூட ரத்த அழுத்தம் காரணமாக இருக்கலாம். இதய துடிப்பு அதிகமாக இருந்தால், நமக்கு ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்பு உள்ளது. காலையில் ஏற்படும் வாந்தி அல்லது குமட்டல் ஏற்பட்டாலோ, அதற்கு வேறு எந்த காரணங்கள் இல்லாததாலோ ரத்த அழுத்தம் ஏற்படலாம்.