இலங்கை

இலங்கையில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

இலங்கையில் எரிபொருட்களுக்கு இன்று சனிக் கிழமை முதல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எரி பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படும் ஆபத்து உள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வற் தவ ணைகள் இன்று (20.04)  முதல் செலுத்தப்பட வேண்டும்.

இந்த வரியால் எரிபொருள் நிலை யங்கள் கடும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள் ளன. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக் கப்பட்டுள்ள வற் வரி என் பது உரிமையாளருக்கு கிடைக்கக்கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும்.

அவ்வாறு செலுத்தப படாது விட்டால் எரி பொருள் நிலையங்களால் தொடர்ந்து இயங்க முட யாது போய்விடும். கடநத் 3 மாதங்களாக இந்தபிரச்னையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம்.

எனினும், கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!