இஸ்ரேல் நோக்கி பயணித்த இலங்கையர்கள்!! துபாய்க்கு திருப்பிவிடப்பட்ட விமானம்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்நிலையில, Fly Dubai விமானம் FZ 1625 இல் இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் குழு துபாயில் சிக்கித் தவித்துள்ளனர்.
இஸ்ரேல் எல்லைக்குள் ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கிடைத்த தகவலையடுத்து, இலங்கையர்கள் உள்ளிட்ட பயணிகளுடன் விமானம் துபாய்க்கு திருப்பி விடப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனை ஊறுதிப்படுத்தியுள்ளார்.
பிராந்தியத்தில் விமான தாமதங்கள் இருப்பதாகவும், விமான அட்டவணையில் சாத்தியமான மாற்றங்களுக்கு அந்தந்த விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 32 times, 1 visits today)