இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ள அறிவிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
மிகவும் அத்தியாவசியமான காரணங்களைத் தவிர, வீடு, வேலை செய்யும் இடம், விவசாய நிலம் அல்லது வசிக்கும் இடத்தை விட்டு வெளியே வரக்கூடாது
நோய் காரணமாக மருந்து மற்றும் தடுப்பூசி போடுபவர்கள் பல நாட்களுக்கு தேவையான மருந்தை வைத்திருக்க வேண்டும். உலர் உணவு மற்றும் குடிநீரை சேமித்து வைக்குமாறும் இலங்கையர்களுக்கு தூதுவர் அறிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பொறுப்பற்ற முறையில் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் விளக்கங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும், உணர்வுப்பூர்வமான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்றும் தூதுவர் கேட்டுக்கொள்கிறார்.
இணையம், தொலைபேசி சேவைகள், ஜிபிஎஸ் வழிகாட்டுதல் சேவைகள் அவ்வப்போது செயலிழக்கக்கூடும், எனவே தேவையற்ற பீதியைத் தவிர்க்கவும் என்று அவர் தெரிவிக்கிறார்.
ஒவ்வொரு வீட்டிலும், பணியிடத்திலும் பாதுகாப்பான அறைகள் மற்றும் குடியிருப்புகள் இருப்பதால், சைரன் சத்தம் கேட்டால், பாதுகாப்பான இடத்துக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கவனித்துக்கொள்பவர்களுக்கு இது முக்கியம் என்றும் தூதர் நினைவூட்டுகிறார்.
தற்போதைய நிலவரங்கள் குறித்து தூதரகம் தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும் எந்தவொரு அவசர நிலையிலும் இலங்கையர்களுக்கு தூதரகத்தின் சேவைகள் கிடைக்கும் எனவும் தூதுவர் நிமல் பண்டாரர மேலும் தெரிவிக்கின்றார்.