தேர்தல் பிரசாரத்தின் போது பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்ட எம்.பி

பாஜக எம்பி காகன் முர்முவின் வீடியோ ஒன்று தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டதே அதற்கு காரணம் ஆகும்.
சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை அந்நாட்டு பெண்களும், பிற மக்களும் விமர்சித்துள்ளனர்.
இருப்பினும், உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்திற்குப் பேசிய அந்தப் பெண், இந்த சம்பவத்தை ” அன்பின் செயல்” என்று விவரித்தார்.
“என் அப்பா வயதில் யாராவது என் மீது பாசம் காட்டி கன்னத்தில் முத்தமிட்டால், என்ன பிரச்சனை? ஏன் மக்களுக்கு இவ்வளவு அழுக்கான மனம் இருக்கிறது? அது எப்படி தவறு?” என்று அந்தப் பெண் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது ஒரு தந்தை தனது மகளிடம் காட்டும் பாசத்தின் செயல் என்றும் இந்த எம்.பி.க்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களும் தெரிவித்துள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)