உலகம்

உலகம் முழுவதும் மீண்டும் பரவி வரும் சுவாச அமைப்பு தொடர்பான தொற்று நோய் குறித்து எச்சரிக்கை!

சுவாச அமைப்பு தொடர்பான தொற்று நோயான கக்குவான் இருமல், உலகின் பல நாடுகளில் மீண்டும் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் வருடந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கக்குவான் இருமல் நோயால் பாதிக்கப்பட்டு இறப்புகள் பதிவாகி வருகின்ற போதிலும், இந்த ஆண்டு அது அதிகரிப்பை காட்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சீனா, பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சீனாவில் இருந்து 32,380 கக்குவான் இருமல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 13 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 20 வீத அதிகரிப்பு என சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஆண்டை விட பிலிப்பைன்ஸில் கக்குவான் இருமல் நோயாளிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்