ஜெர்மனியில் மக்களின் மோசமான செயல் தொடர்பில் வெளியான தகவல்
ஜெர்மனியில் மக்களின் மோசமான செயல் தொடர்பில் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் பல்வேறு வெறுப்பின் காரணமாக அரச திணைக்களங்களில் கடமையாற்றும் பணியாளர்கள் மீது மக்கள் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள முன்சன் நகரில் அதிகளவான தாக்குதல் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கடந்தாண்டில் மட்டும் 116 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
உயிர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர், தீயணைப்பு படை வீரர்கள், சமூக உதவி திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுபவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 75 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலையில் மக்களின் இந்த நிலைப்பாடு குறித்து அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் அரச நிர்வாகத்தில் கடமையாற்றியவர்களுக்கு இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு உளவியல் சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.