அமெரிக்காவில் Autopilot பயன்படுத்தியதால் உயிரிழந்த நபர் – இழப்பீடு கொடுத்த Tesla
அமெரிக்காவில் Tesla காரின் AutoPilot எனும் வாகனம் தானாகச் செல்லும் அம்சத்தைப் பயன்படுத்தி உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு Tesla நிறுவனம் இழப்பீடு வழங்கியுள்ளது.
நீதிமன்ற விசாரணையைத் தவிர்த்து சமரசப் பேச்சில் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு அடுத்த வாரம் விசாரிக்கப்பட வேண்டியிருந்தது.
சம்பவம் 6 ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவில் நடந்தது. வட கலிபோர்னியாவின் சிலிகான் வேலி பகுதியில் Tesla X காரில் வெய் லுன் ஹுவாங் என்ற அந்த நபர் Autopilot அம்சத்தைப் பயன்படுத்திச் சென்றுகொண்டிருந்தார்.
வாகனம் தடுப்பில் மோதியதில் கடுமையாகக் காயமுற்ற ஹுவாங் பின்னர் உயிரிழந்துள்ளார்.
வாகனத்தின் பாதுகாப்பை ஹுவாங் முழுமையாக நம்பியதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2017 X ரக Tesla வாகனத்தை வடிவமைப்பதில் நிறுவனம் சிரத்தை காட்டவில்லை. அது கவனக்குறைவாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று ஹுவாங்கின் குடும்பம் வழக்குத் தொடுத்தது.
அமெரிக்கக் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள், Autopilot எச்சரித்தும் ஹுவாங் கேட்கவில்லை என்பதைக் கண்டுபிடித்தனர்.
Tesla வழக்கை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல விரும்பவில்லை. Tesla நிறுவனம், Autopilot அம்சத்தைப் பயன்படுத்தும்போதும் ஓட்டுநர்கள் கவனத்துடன் இருப்பது அவசியம் என்று எச்சரிக்கிறது.