மீண்டும் அமெரிக்கா திரும்பினார் ஜேனட் யெல்லன்!
அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெல்லனும் அவரது குழுவும் சீனாவை விட்டு வெளியேறி வாஷிங்டனுக்குத் திரும்பியுள்ளனர்.
பெய்ஜிங்கின் பொருளாதார மாதிரி மற்றும் வர்த்தக நடைமுறைகள் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களை அதிக மானியத்துடன் கூடிய சோலார் தயாரிப்புகள், மின்சார வாகனங்கள் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரிகளை உற்பத்தி செய்வதன் மூலம் நியாயமற்ற போட்டித் தன்மைக்கு ஆளாகின்றன என அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்ய அமெரிக்க-சீனா பேச்சுவார்த்தைக்கு செல்ல விரும்புவதாக யெலன் கூறினார்.
சீன அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும் பிற கொள்கை ஆதரவு சீனாவில் சோலார் பேனல் மற்றும் EV தயாரிப்பாளர்களை தொழிற்சாலைகளில் முதலீடு செய்ய ஊக்குவித்துள்ளது, உள்நாட்டு சந்தை உறிஞ்சக்கூடியதை விட அதிக உற்பத்தி திறனை உருவாக்குகிறது. இதனை அமெரிக்கா போட்டியாக கருதுகிறது.
இந்நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் ஜேனட் யெல்லன் சீனாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது இரு தரப்பினரும் சமச்சீர் பொருளாதார வளர்ச்சியில் “தீவிர பரிமாற்றங்களை” நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.