வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
தண்ணீர் நமது அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று. தண்ணீர் அருந்துவதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் பல உண்டு. தண்ணீர் குடிப்பது மிகவும் நல்ல விஷயங்களில் ஒன்றுதான். காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது மலச்சிக்கல் பிரச்னைக்கு மிகவும் நல்ல தீர்வாகும். உடல் எடையைக் குறைப்பதில் முக்கியப் பங்கு தண்ணீருக்குத்தான் உண்டு.
ஆனால், பலர் செய்யும் தவறு காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதில்லை. அதற்கு மாறாக காபி, டீ போன்ற பானங்களைத்தான் தினமும் சாப்பிடுகிறார்கள். இதனால் உடலுக்குக் கெடுதிதான். இரவு முழுதும் ஓய்வெடுக்கும் வயிற்றுக்கு காலையில் முதலில் தண்ணீர்தான் தேவைப்படும். ஏனென்றால், அன்றைய நாளை சுறுசுறுப்புடனும் ஆரோக்கியமாகவும் செயல்பட தண்ணீரே ஆதாரமாக உள்ளது.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுக் கிருமிகளை அழித்து கழிவாக வெளியேற்ற உதவுகிறது. மேலும், காலையில் வெறும் வயிற்றில் நீர் குடிப்பதால் உங்கள் பசியைக் குறைக்கிறது. இதனால், உடல் பருமன் அதிகரிப்பதை குறைக்க முடியும். காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க, அது வாய் துர்நாற்றத்தை போக்குவதோடு, பற்களில் இருக்கும் கிருமிகளையும் சேர்த்து வெளியேற்றி நாள் முழுவதும் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை அதிகமாகக் குடிப்பதனால் அது உடம்பில் உள்ள அசுத்த நீரை வியர்வையாக வெளியேற்றுகிறது. கலோரிகள் குறைவாக உள்ள தண்ணீரை எடுத்துக்கொள்வதால் உடலில் கொழுப்பு செல்கள் தேங்குவதைக் குறைக்க முடியும்.
இனி, தினமும் எழுந்ததும் வெறும் வயிற்றில் காலையில் தண்ணீர் அருந்திப் பருகுங்கள், வாழ்நாள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வீர்கள்.